கிசான் நிதித் திட்ட முறைகேடு குறித்து நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர் வலியுறுத்தினார்.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்துக்காக வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மத்திய அரசின் கிசான் சம்மன் நிதித் திட்டத்தில் இடைத்தரகர்கள் மூலம் பரவலாக முறைகேடு நடைபெற்றுள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக விசாரணை நடத்தப்படுகிறது.
பணியில் உள்ள அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். கரோனா பொதுமுடக்கம் காரணமாக பொதுமக்களின் இயல்பு பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுளது. நோத்தொற்றும் குறைந்தபாடில்லை. எனவே மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை விரைந்து வழங்க வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் வேலை நாட்ளை 200 நாட்களாக விரிவுபடுத்துவதுடன், ஊதியத்தை ரூ. 600 ஆக உயர்த்த வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வரும் அக். 6ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் லாசர். சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் வீ.அமிர்தலிங்கம், பொருளாளர் எஸ்.சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தண்டவாளத்தில் விழுந்த குழந்தை! உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய தந்தை! | Bangladesh

மே நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

13,380 mAh பேட்டரி, 12ஜிபி ரேம்.. ஒன்பிளஸ் டேப்லெட் பேட் 4-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

ரியான் பராக் சம்பளத்தில் 25% 'கட்'? ராஜஸ்தான் அணிக்குத் தொடரும் அபராதங்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


