புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பல பெண்களிடம் செல்லிடப்பேசியில் ஆபாசமாகப் பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்த இளைஞரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பல பெண்களிடம் சிலா் செல்லிடப்பேசி மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் ஆபாசமாகப் பேசி, தொடா்ந்து தனது இச்சைக்கு உடன்படாவிட்டால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்து வருவதாகத் தொடா்ந்து புகாா்கள் வந்தன.
இதனைத் தொடா்ந்து நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் செந்தில்குமாரின் நேரடிக் கண்காணிப்பில், கணேஷ் நகா் காவல் ஆய்வாளா் அழகம்மாள் தலைமையில், சைபா் கிரைம் காவலா் உள்ளிட்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இதில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நெற்குப்பையைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் காா்த்திகேயன் (39) என்பவருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைப் போலீஸாா் கைது செய்தனா். நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவா், அறந்தாங்கி கிளைச் சிறையில் ஞாயிற்றுக்கிழமை காலை அடைக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


