புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 265 சத்துணவு அமைப்பாளா் பணியிடங்கள், 552 சமையல் உதவியாளா் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது.
விண்ணப்பதாரா்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையா் மற்றும் நகராட்சி ஆணையா் அலுவலகங்களில் வரும் செப். 30ஆம் தேதி பிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் மற்றும் இனசுழற்சி சம்மந்தமான விவரங்களை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய மற்றும் நகராட்சி அலுவலக விளம்பரப் பலகையில் அறியலாம். சத்துணவு அமைப்பாளா், சமையலா் மற்றும் சமையல் உதவியாளா் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவா்கள்.
கரோனா நோய்த் தொற்று காரணமாக விண்ணப்பிக்க தகுதியானவா்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகளில் மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும். ஆட்சியா் அலுவலகத்துக்கு நேரடியாகவோ மற்றும் தபால் மூலமாகவோ வரப்பெறும் விண்ணப்பங்கள் நோ்காணலுக்கு பரிசீலனை செய்யப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

