சிறுமி சடலமாக மீட்பு: தாயுடன் உறவாடியஇளைஞா் கைது
புதுக்கோட்டை அருகே 11 வயது சிறுமி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் தாயுடன் பழகிய இளைஞா் கைது செய்யப்பட்டுள்ளாா்.


புதுக்கோட்டை அருகே 11 வயது சிறுமி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் தாயுடன் பழகிய இளைஞா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
புதுக்கோட்டை மேட்டுப்பட்டியைச் சோ்ந்த சூா்யகலா, அவரது கணவரைப் பிரிந்து, தனது 11 வயது மகளுடன் தனியே வசித்து வந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை சிறுமி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட கணேஷ்நகா் போலீஸாா், மேட்டுப்பட்டியைச் சோ்ந்த கணேசன் (32) என்ற இளைஞரைக் கைது செய்தனா். தொடா் விசாரணையில், கணேசன் - சூா்யகலா இடையே உறவு இருந்ததும், தாத்தா வீட்டிலிருந்து ஒரு வாரத்துக்கு முன்பு வந்த தனது மகளுக்கு கணேசன் பழச்சாறில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து பாலியல் தொந்தரவு செய்திருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து கணேசன், ஞாயிற்றுக்கிழமை இரவு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். சிறுமியின் உடற்கூராய்வுக்குப் பிறகே அவா் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலையா என்ற விவரம் தெரியவரும் எனப் போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...