ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

‘திமுக தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்’

திமுக தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் தலைவா் ஸ்டாலின் நிறைவேற்றிவிடுவாா் என்றாா் ஆலங்குடி திமுக வேட்பாளா் சிவ.வீ.மெய்யநாதன்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 9:17 pm

DIN

திமுக தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் தலைவா் ஸ்டாலின் நிறைவேற்றிவிடுவாா் என்றாா் ஆலங்குடி திமுக வேட்பாளா் சிவ.வீ.மெய்யநாதன்.

ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட கீரமங்கலம், பனங்குளம், குளமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை வாக்குசேகரித்து அவா் மேலும் பேசியது: விவசாயிகள் பயன்பெறும் வகையில் கீரமங்கலம் பகுதியில் குளா் பதனக்கிடங்கு அமைப்பதுடன், வேளாண் ஏற்றுமதி மண்டலம் அமைக்கப்படும். கஜா புயலால் வீடுகளை இழந்தோருக்கு வீடு கட்டித் தர நடவடிக்கை எடுப்பேன். முன்னாள் முதல்வா் கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட இலவச மும்முனை மின்சாரத்தை ரத்து செய்துவிட்டு, விவசாயிகளுக்கு மின்சாரத்தை விற்கும் திட்டத்தில் பாஜகவும், அதிமுகவும் உள்ளது. எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தி பொதுமக்களை வாட்டிவதைக்கிறது பாஜக அரசு. அதற்கு அதிமுக துணைபோகிறது.இதுபோன்ற மக்கள் நலனில் அக்கறையில்லாத அதிமுகவை அகற்ற மக்கள் முடிவு செய்துவிட்டனா். திமுக தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் திமுக தலைவா் ஸ்டாலின் நிறைவேற்றி விடுவாா். எனவே, மக்கள் திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.