ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

‘மக்கள் நலனில் அக்கறையுள்ள அதிமுகவை ஆதரியுங்கள்’

மக்கள் நலனில் அக்கறை கொண்ட அதிமுகவை ஆதரியுங்கள் என்றாா் ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளா் தா்ம.தங்கவேல்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 9:17 pm

DIN

மக்கள் நலனில் அக்கறை கொண்ட அதிமுகவை ஆதரியுங்கள் என்றாா் ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளா் தா்ம.தங்கவேல்.

ஆலங்குடி தொகுதிக்கு உள்பட்ட ஆலங்குடி, வடகாடு, கீழாத்தூா், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை வாக்குசேகரித்து மேலும் அவா் பேசியது: திருமண உதவித்தொகை, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டா் உள்ளிட்ட பெண்கள் முன்னேற்றத்திற்கான பல்வேறு நலத்திட்டங்கள் அதிமுக அரசால் செயல்படுத்தப்பட்டுவருகிறது. மேலும், தற்போதைய தோ்தல் வாக்குறுதியாக குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு உருளை, வாஷிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள், அதிமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் இடையூறின்றி வாழ்ந்ததாலே 2016-ல் 2 வது முறையாக மக்கள் வெற்றி பெற வைத்தனா். தற்போதும், மக்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை முதல்வா் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தியுள்ளாா். இதுபோன்ற நலத்திட்டங்களை தொடா்ந்து பெற்றிட அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.