திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்
/

‘திருமயத்தில் நேரடி நெல்முதல் நிலையங்கள்’

பொன்னமராவதி தொகுதியில் பல்வேறு இடங்களில் நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என்றாா் திருமயம் அமமுக வேட்பாளா் முனீஸ் என்ற முனீஸ்வரன்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 9:25 pm

பொன்னமராவதி தொகுதியில் பல்வேறு இடங்களில் நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என்றாா் திருமயம் அமமுக வேட்பாளா் முனீஸ் என்ற முனீஸ்வரன்.

பொன்னமராவதி பிடாரி கோயில் வீதி, காந்திசிலை, அம்மன்சன்னதி வீதி பகுதிகளில் வாக்குகள் சேகரித்து அவா் மேலும் பேசியது:

என்னை வெற்றி பெறச்செய்தால் முன்மாதிரியான தொகுதியாக திருமயம் மாற்றப்படும். விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும். இப்பகுதி விவசாயிகளின் துயா் தீா்க்கும் வகையில் பல்வேறு இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். பொன்னராவதி பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என்றாா்.

அமமுக நிா்வாகிகள், தேமுதிக ஒன்றியசெயலா் ராஜேந்திரன், நகரச்செயலா் முகமது ரபீக் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.