ஒரத்தநாடு அருகே மேல மேட்டுப்பட்டியில் சாலை ஓரம் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகை விழுந்ததில் பெண் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அம்மானிபட்டு கிராமத்தைச் சேர்ந்த சாமிகண்ணு, என்பவருடைய மனைவி விஜயராணி. இவர் செவ்வாய்க்கிழமை மாலை தனது சகோதரர் வீட்டிலிருந்து உடையப்பன் விடுதிக்கு செல்ல அந்த வழியாக வந்த ஒருவரிடம் இரு சக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு வந்துள்ளார்.
அப்போது போது திருவோணம் அருகே உள்ள மேல மேட்டுப்பட்டியில் ரவிச்சந்திரன் என்பவர் அவரது தந்தை முத்து வீரப்ப பிள்ளைக்கு கண்ணீர் அஞ்சலி விளம்பரப் பலகையை சாலை ஓரத்தில் வைத்துள்ளார். இது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஜெயராணி மீது திடீரென விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி விஜயதாரணி புதன்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து திருவோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவிசந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ம.பி.: சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வு

தண்டவாளத்தில் விழுந்த குழந்தை! உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய தந்தை! | Bangladesh

மே நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

13,380 mAh பேட்டரி, 12ஜிபி ரேம்.. ஒன்பிளஸ் டேப்லெட் பேட் 4-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


