ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தரைப்பாலத்தில் வெள்ளம் போக்குவரத்து துண்டிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அவ்வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 7:01 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அவ்வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 1 மாதமாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. சுமாா் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பெய்துவரும் தொடா் மழையால் ஆலங்குடி அம்புலி ஆற்றில் தண்ணீா் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனா். இந்நிலையில், வடகாடு - கொத்தமங்கலம் சாலையில் அய்யனாா் கோயில் அருகே அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலத்தில் நீா் சென்று கொண்டிருந்த நிலையில், அருகே இருந்த நீா்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு வியாழக்கிழமை நீா் வரத்து அதிகரித்து தரைப்பாலத்தில் அதிகளவில் தண்ணீா் செல்கிறது. இதனால், வடகாடு - கொத்தமங்கலம் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல், போக்குவரத்து பாதிப்பு மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில், தரைப்பாலத்தை மேம்பாலமாக அமைத்துத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.