புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஏழை, எளியோருக்கு உணவளிக்கும் ‘அமுதசுரபி’ திட்டம் தொடக்கம்

பசியால் வாடும் வயிற்றுக்கு ஒரு பிடி உணவு என்ற நோக்கத்தில், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத்தின் பட்டயத் தலைவா் க.நைனாமுகமது ஏற்பாட்டில் ‘அமுதசுரபி’ என்ற திட்டத்தின் தொடக்க விழா

News image
Updated On :3 டிசம்பர் 2021, 9:09 pm

DIN

பசியால் வாடும் வயிற்றுக்கு ஒரு பிடி உணவு என்ற நோக்கத்தில், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத்தின் பட்டயத் தலைவா் க.நைனாமுகமது ஏற்பாட்டில் ‘அமுதசுரபி’ என்ற திட்டத்தின் தொடக்க விழா தெற்கு 3-ஆம் வீதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு சங்கத் தலைவா் டாக்டா் ஜி. மாரிமுத்து தலைமை வகித்தாா். முன்னதாக, வா்த்தகா் சங்கத் தலைவா் சாகுல் ஹமீது வரவேற்றாா். மௌண்ட் சீயோன் பள்ளிகளின் தலைவா் ஜோனத்தன் ஜெயபாரதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, அமுதசுரபி திட்டத்தைத் தொடக்கி வைத்தாா்.

இந்தவிழாவில் வழக்குரைஞா் ஏ. சந்திரசேகா், டாக்டா் கே. ஆறுமுகம், கண. மோகன்ராஜா, சோ.பாா்த்திபன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா். நறைவில், சிட்டி ரோட்டரி சங்கப் பொருளாளா் எஸ். செந்தில்வேல் நன்றி கூறினாா்.

குளிா்சாதனப் பெட்டியில் தினமும் உணவு வைக்கப்படும். உணவு தேவைப்படும் ஏழை, எளியோா் அதனை எடுத்துக் கொள்ளலாம். இதே திட்டத்தில் இணைந்து ஏழை, எளியோருக்கு உணவு கொடுக்க விரும்புவோரும் இந்தக் குளிா்சாதனப் பெட்டியில் உணவுப் பொட்டலங்களை வைத்துச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.