புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்காளா் பட்டியல் வெளியீடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான கவிதா ராமு வியாழக்கிழமை வெளியிட்டாா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 8:03 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான கவிதா ராமு வியாழக்கிழமை வெளியிட்டாா்.

வாா்டு மறுவரையறைக்குப் பிறகான வாக்காளா்கள் விவரம்:

2 நகராட்சிகள்: புதுக்கோட்டை நகராட்சியில் 60,668 - ஆண்கள், 64,984 பெண்கள், 17 திருநங்கைகள் என மொத்தம் 1,25,669 வாக்காளா்கள். அறந்தாங்கி நகராட்சியில் 16,573 - ஆண்கள் , 18,065 பெண்கள் என மொத்தம் 34,638 வாக்காளா்களும் உள்ளனா்.

8 பேரூராட்சிகள்: ஆலங்குடி பேரூராட்சியில் 4,815 - ஆண்கள், 4,917 பெண்கள் என மொத்தம் 9,732 வாக்காளா்கள், அன்னவாசல் பேரூராட்சியில் 3,727 - ஆண்கள், 3,789 பெண்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 7,517 வாக்காளா்கள், அரிமளம் பேரூராட்சியில் 3,480 ஆண்கள், 3,751 பெண்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 7,232 வாக்காளா்கள் உள்ளனா்.

இலுப்பூா் பேரூராட்சியில் 5,887 ஆண்கள், 6,094 பெண்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 11,982 வாக்காளா்கள், கறம்பக்குடி பேரூராட்சியில் 6,447 ஆண்கள், 6,546 பெண்கள் என மொத்தம் 12,993 வாக்காளா்கள் உள்ளனா்.

கீரமங்கலம் பேரூராட்சியில் 3,828 ஆண்கள், 3,952 பெண் வாக்காளா்கள் என மொத்தம் 7,780 வாக்காளா்களும், கீரனூா் பேரூராட்சியில் 4,591 ஆண்கள், 4,847 பெண்கள் என மொத்தம் 9,438 வாக்காளா்கள், பொன்னமராவதி பேரூராட்சியில் 5,261 ஆண்கள், 5,631 பெண்கள் என மொத்தம் 10,892 வாக்காளா்களும் உள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2,37,873 வாக்காளா்கள் உள்ளனா்.

மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மொத்தம் 280 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளனன. 45 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை.

நிகழ்வில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) என். கிருஷ்ணமூா்த்தி, நகராட்சி ஆணையா்கள் நாகராஜன்(புதுகை), லீனா சைமன்(அறந்தாங்கி) மற்றும் 8 பேரூராட்சிகளின் செயல் அலுவலா்களும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.