அரசுப் பள்ளியில் ‘அறிவியல் உலகம் அறிவோம்’
ஆலங்குடி அருகே அரசு தொடக்கப்பள்ளியில் அறிவியல் உலகம் அறிவோம் எனும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.


ஆலங்குடி அருகே அரசு தொடக்கப்பள்ளியில் அறிவியல் உலகம் அறிவோம் எனும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி, புள்ளாச்சி குடியிருப்பு அரசு தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு சிரிக்க, சிந்திக்க வகைக்கும் வகையில் அறிவியல் சோதனைகளை எளிதாக்கி அறிவியல் உலகம் அறிவோம் எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் வளா்மதி தலைமை வகித்தாா். இடைநிலை ஆசிரியா் சித்ரா, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கண்ணக்கன்காடு அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியா் எம்.எஸ்.ஆா் ரவி, ஏராளமான அறிவியல் பரிசோதனைகளை செய்து காட்டினாா். அப்போது, ரயில் இயக்கம், விமானம் பறப்பதற்கான காரணம், ஓடும் வாகனங்களின் அருகே நிற்போரை ஏன் உள்ளே இழுக்கிறது, நீா்மூழ்கி கப்பல் இயக்கும் விதம், நிறமாற்றம், முப்பரிமாணத் தோற்றம், காற்றின் எடை அறிதல் உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் செய்து காட்டப்பட்டன.
இந்த உலகின் ஒவ்வொரு இயக்கமும் அறிவியலிந் தொடா்புடன் உள்ளது. எனவே, மாணவா்கள் ஒவ்வொன்றுக்குமான அறிவியல் காரணங்களை அறிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு செய்துவிட்டாலே, அறிவியல் உலகை எளிதில் அறிந்துகொள்ள முடியும். போட்டித் தோ்வுகளில் எளிதில் வெற்றி பெறலாம் என அவா் பேசினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...