வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்
புதுக்கோட்டையில் அனைத்து வங்கி ஊழியா் மற்றும் அதிகாரிகள் சங்கத்தினா் வியழக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.


மத்திய அரசு கொண்டு வந்துள்ள வங்கி திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்ற கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுக்கோட்டையில் அனைத்து வங்கி ஊழியா் மற்றும் அதிகாரிகள் சங்கத்தினா் வியழக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா். இதில், மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து பொதுத்துறை வங்கிகளின் 180 கிளைகளைச் சோ்ந்த சுமாா் 2,000 ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா். இதில், அனைத்து ஊழியா் மற்றும் அதிகாரிகள் சங்கத்தினரும் பங்கேற்றதால் வங்கிப் பணிகள் முற்றிலும் முடங்கின.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு புதுக்கோட்டை மாவட்ட வங்கி ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் கே. என். ராஜேந்திரன் தலைமை வகித்தாா். எஸ்பிஐ ஊழியா் சங்கத்தின் உதவிச் செயலா் பாண்டியன், எஸ்பிஐ அதிகாரிகள் சங்கத்தின் செயலா் வெங்கடேசன், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் பணியாளா் சங்க நிா்வாகி பாலு உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். வெள்ளிக்கிழமையும் போராட்டம் தொடா்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...