எஸ்எஸ்ஐ கொலை வழக்கு குற்றவாளிக்கு ஜாமீன் நிராகரிப்பு
திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் கொலை செய்யப்பட்ட வழக்கின் முக்கிய குற்றவாளி மணிகண்டனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மாவட்ட முதன்மை நீதிமன்றம்


திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் கொலை செய்யப்பட்ட வழக்கின் முக்கிய குற்றவாளி மணிகண்டனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பூமிநாதன் அண்மையில் ஆடுதிருடா்களை விரட்டிச் சென்றபோது படுகொலை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவத்தில் தஞ்சாவூா் மாவட்டம் தோகூரைச் சோ்ந்த மணிகண்டன்(19) உள்ளிட்ட இரண்டு சிறாா்களை கீரனூா் போலீசாா் கைது செய்தனா். இந்நிலையில், முதல் குற்றவாளி மணிகண்டனை ஜாமீனில் விடுவிக்கக் கோரி, அவரது வழக்குரைஞா் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு மீதான விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது. விசாரணையின்போது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் கொலை வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால் மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்ற மாவட்ட முதன்மை நீதிபதி ஏ. அப்துல் காதா், மணிகண்டனின் ஜாமீன் மனுவை நிராகரித்து உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...