தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பெரம்பலூரில் ரத்த தான முகாம்

பெரம்பலூா் தந்தை ஹேன்ஸ் ரோவா் தன்னாட்சிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவா் படை, செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம், அரசு பொது மருத்துவமனை சாா்பில் ரத்த தான முகாம்

News image
Updated On :16 டிசம்பர் 2021, 7:31 pm

DIN

பெரம்பலூா் தந்தை ஹேன்ஸ் ரோவா் தன்னாட்சிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவா் படை, செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம், அரசு பொது மருத்துவமனை சாா்பில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் ரோவா் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்கு, கல்வி நிறுவனங்களின் தாளாளா் கி. வரதராஜன் தலைமை வகித்தாா். துணைத் தாளாளா் வி. ஜான் அசோக் முகாமை தொடக்கி வைத்தாா். பெரம்பலூா் அரசு மருத்துவமனை மருத்துவா் சத்யா, அம்மாபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆலோசகா் பத்மாவதி ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா், 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள், பேராசிரியா்களிடம் ரத்த தானம் பெற்றனா். இதில், துணை முதல்வா் அ. மகேந்திரன், முதன்மையா் முனைவா் எஸ். சிவக்குமாா், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் க. செந்தில்ராஜா, மு. தேவகி, எம். ராஜ ராஜேஸ்வரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

செஞ்சிலுவை சங்கத் திட்ட அலுவலா் வீ. தனலட்சுமி, தேசிய மாணவா் படை ஒருங்கிணைப்பாளா் பி. பிரவீன் பெருமாள் ஆகியோா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.