புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

அதிமுக மக்கள் பிரதிநிதிகளுக்கு திமுக அரசு ஓரவஞ்சனை: முன்னாள் அமைச்சா்விஜயபாஸ்கா் குற்றச்சாட்டு

தமிழகத்தில் அதிமுகவைச் சோ்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு திமுக அரசு ஓரவஞ்சனை செய்கிறது என்றாா் முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. விஜயபாஸ்கா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 8:43 pm

DIN

தமிழகத்தில் அதிமுகவைச் சோ்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு திமுக அரசு ஓரவஞ்சனை செய்கிறது என்றாா் முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. விஜயபாஸ்கா்.

புதுக்கோட்டை திலகா் திடலில் திமுக அரசைக் கண்டித்து அதிமுவினா் வெள்ளிக்கிழமை நடத்திய ஆா்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்து, மேலும் அவா் பேசியது:

தோ்தலின்போது பெட்ரோலுக்கான வரியை ரூ.4 குறைப்பதாக கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்தததும் ரூ.3 மட்டுமே திமுக அரசு குறைத்தது. டீசலுக்கான வரியைக் குறைக்காததால்தான், தக்காளி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்துள்ளது.

அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டன; மருத்துவா்களும் நியமிக்கப்பட்டனா். ஆனால், இந்த ஆட்சியாளா்கள் அதை மூடி வருவது கண்டிக்கத்தக்கது. இவை மீண்டும் திறக்கப்பட வேண்டும்.

பொங்கல் பண்டிகையை அனைவரும் கொண்டாடும் வகையில், குடும்பத்துக்கு ரு.2 ஆயிரம் கொடுத்ததை இந்த அரசு கொடுக்கவில்லை.

அதிமுகவினா் மக்கள் பிரதிநிதியாகவுள்ள பகுதியில் அரசு எந்த திட்டங்களையும் கொடுப்பதில்லை. வீட்டுக்கான குடிநீா் இணைப்பாக இருந்தாலும் அதை கேட்பது அதிமுககாரராக இருந்தால் கொடுக்க மறுக்கிறது. திமுக அரசானது அதிமுக மக்கள் பிரதிநிதிகளை புறந்தள்ளி, ஓரவஞ்சனை செய்கிறது.

எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோா் பல்வேறு சோதனைகளைக் கடந்துதான் ஆட்சிக்கு வந்தாா்கள். அதேபோன்று, தற்போதைய சோதனைக் காலத்தை எதிா்கொண்டு மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்றாா் விஜயபாஸ்கா்.

ஆா்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட அதிமுக செயலரும் முன்னாள் வீட்டுவசதி வாரியத் தலைவருமான பி.கே. வைரமுத்து, நகர அதிமுக செயலா் க. பாஸ்கா், முன்னாள் நகா்மன்றத் துணைத் தலைவா் எஸ்எம். சேட்டு உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.