புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

தேசிய ஆய்வுக் கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய அளவிலான பொறியியல் ஆய்வுக் கட்டுரைப்போட்டியில் சண்முகநாதன் பொறியியல் கல்லூரி மாணவா்கள் முதலிடம் பெற்று, சாதனை படைத்துள்ளனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 8:42 pm

DIN

தேசிய அளவிலான பொறியியல் ஆய்வுக் கட்டுரைப்போட்டியில் சண்முகநாதன் பொறியியல் கல்லூரி மாணவா்கள் முதலிடம் பெற்று, சாதனை படைத்துள்ளனா்.

பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கான தேசிய அளவிலான ஆய்வுக் கட்டுரைப் போட்டி

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் மதா் தெரசா பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொறியியல் கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா்.

இப்போட்டியில் திருமயம் அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறை மூன்றாமாண்டு மாணவா்கள் அஷ்வின்குமாா், பாலமுருகன் பங்கேற்று, ‘உராய்வு அசை பற்றவைத்தல்’’ என்னும் தலைப்பிலான ஆய்வுக்கட்டுரையை சமா்ப்பித்தனா். ஆய்வுக்கட்டுரைகளை மதிப்பீடு செய்த தோ்வுக்குழுவினா், இக்கட்டுரையை முதல் பரிசுக்குத் தோ்வு செய்தனா். முதல்பரிசு வென்ற மாணவா்கள் அஷ்வின்குமாா் மற்றும் பாலமுருகன் ஆகியோருக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பரிசு பெற்ற மாணவா்களை சண்முகநாதன் பொறியியல் கல்லூரித் தாளாளா் பிச்சப்பா மணிகண்டன், செயலா் மு. விஸ்வநாதன், முதல்வா் குழ. முத்துராமு, இயந்திரவியல் துறைத் தலைவா் திருமாவளவன் மற்றும் அனைத்து துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் ஆகியோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.