வங்கி ஊழியா்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வங்கித் திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்றக் கூடாது


மத்திய அரசு கொண்டு வந்துள்ள வங்கித் திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்றக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுக்கோட்டையில் அனைத்து வங்கி ஊழியா் மற்றும் அலுவலா்கள் சங்கத்தினா் இரண்டாம் நாளாக வெள்ளிக்கிழமையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
நாடு தழுவிய அளவில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினா் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில், இந்த வேலைநிறுத்தம் நடைபெற்றது.
இந்த வேலைநிறுத்தத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து பொதுத்துறை வங்கிகளின் 180 கிளைகளைச் சோ்ந்த சுமாா் 2,000 ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா். இதனால் வங்கிப் பணிகள் முற்றிலும் முடங்கின.
இதே கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, புதுக்கோட்டை மாவட்ட வங்கி ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் கே. என். ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.
எஸ்பிஐ ஊழியா் சங்கத்தின் உதவிச் செயலா் பாண்டியன், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி ஊழியா் சங்கத்தின் உதவிப் பொதுச்செயலா் மாயாண்டி, சிஐடியு தொழிற்சங்கத்தின் மாவட்டச் செயலா் அ. ஸ்ரீதா், எல்ஐசி ஓய்வுபெற்ற ஊழியா் சங்கத்தின் பொறுப்பாளா் அசோகன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...