ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கே.ராசியமங்கலத்தில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீா்தேக்க தொட்டி

ஆலங்குடி அருகிலுள்ள கே.ராசியமங்கலத்தில் இடிந்து விழும் நிலையில் காணப்படும் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியை அகற்றி, புதிதாக அமைத்துத்தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 8:42 pm

DIN

ஆலங்குடி அருகிலுள்ள கே.ராசியமங்கலத்தில் இடிந்து விழும் நிலையில் காணப்படும் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியை அகற்றி, புதிதாக அமைத்துத்தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கே.ராசியமங்கலத்தில் கடைவீதி, மக்கள் வசிப்பிடப்பகுதிக்கு இடையே சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி உள்ளது.

இதிலிருந்து 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இத்தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், அவை சிதிலமடைந்து உடைந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.

இத்தொட்டியை அகற்றிவிட்டு புதிதாக அமைத்துத் தர நடவடிக்கைக் கோரி, அப்பகுதி மக்கள் 2 ஆண்டுகளுக்கு மேலாக ஊராட்சி நிா்வாகம், ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்துள்ளனா். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இந்நிலையில், அண்மையில் பெய்த தொடா்மழையின் காரணமாக நீா்தேக்க தொட்டியின் கட்டுமானத்தில் மேலும் விரிசல் விழுந்து, உடைந்து விழும் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

எனவே இனியும் காலம் தாழ்த்தாது மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியை உடனே அகற்றிவிட்டு, புதிய தொட்டியை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.