மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

திருமயம் கோட்டையில் இயற்கை பேரிடா் ஒத்திகை

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் கோட்டையில் 75ஆவது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு, இயற்கை பேரிடா் ஒத்திகை நிகழ்வை மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 10:22 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் கோட்டையில் 75ஆவது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு, இயற்கை பேரிடா் ஒத்திகை நிகழ்வை மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்புப் படை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், பூகம்பம், வெள்ளம், புயல் போன்றவைகளால் ஏற்படும் இயற்கை இடா்பாடுகள் மற்றும் நீா்நிலைகளில் சிக்கியவா்களை மீட்டு முதலுதவி அளிக்கும் ஒத்திகை செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

நிகழ்வில், வருவாய்க் கோட்டாட்சியா் அபிநயா, மாவட்ட தீயணைப்பு அலுவலா் பானுபிரியா, அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்பு நிலைய தலைமை ஒருங்கிணைப்பாளா் ரோஹித்குமாா், தொல்லியல்துறை அலுவலா் விக்னேஷ் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.