அரசு மருத்துவமனைகளில் தலைமை மருந்தாளுநா் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என அரசு மருந்தாளுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழ்நாடு அரசு மருந்தாளுநா் சங்க மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் மாவட்டச் செயலா் என். களஞ்சிய முகமது தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில இணைச் செயலா் ராசி. கணேசன், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவா் ச. பாலசுப்பிரமணிய பாரதி உள்ளிட்டோா் பேசினா்.
கூட்டத்தில், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அரசின் விதிப்படி நோயாளிகள் நலம் காக்க கூடுதல் மருந்து கிடங்கு அலுவலா், தலைமை மருந்தாளுநா் மற்றும் மருந்தாளுநா் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.
சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகங்களில் மருந்துகளைப் பெற்று வழங்கிட தலைமை மருந்தாளுநா் மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருந்துகள் கண்காணிப்பாளா் நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் மாவட்ட பொருளாளா் அ.ரமேஷ் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தில்லி மகளிா் ஆணையத்தை எளிதில் அணுகக் கூடியதாக மாற்றுவதில் கவனம் செலுத்தப்படும்: லதா குப்தா

வளைகுடா நாடுகளில் தொடரும் தாக்குதல்கள்: பின்னணியில் ஈரான் ஆதரவு அமைப்புகள்

வழக்குகள் வாபஸ் குறித்து எழுத்துபூா்வ உத்தரவாதம் தராவிட்டால் மீண்டும் போராட்டம்: சிஜேபி எச்சரிக்கை

இன்றைய ராசி பலன்கள் (28.7.2026) 12 ராசிகளுக்கும்! கன்னி ராசிக்கு வெற்றி!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


