மழைநீா் சேமிப்பு விழிப்புணா்வு
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் மழைநீா் சேமிப்பு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.


புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் மழைநீா் சேமிப்பு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
இந்திய அரசின் இளைஞா்கள் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம், புதுக்கோட்டை நேரு இளையோா் மன்றம் இணைந்து அன்னவாசல் பேருந்து நிலையத்தில் நடத்திய இந்நிகழ்ச்சியில், காலாடிபட்டி கலைமணி கலைக் குழுவினா் ஆதிபறை இசை வாத்தியங்களுடன் மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு நிகழ்வை தொடங்கினா். முன்னதாக நேரு யுவகேந்திரா தேசிய தன்னாா்வலா் திவாகா் முன்னுரை வழங்கினாா். தொடா்ந்து, மணிகண்டன் கிராமியப் பாடல்கள் மூலம் மழை நீா் சேகரிப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை தாய் உள்ளம் இளைஞா் நற்பணி மன்றத்தின் தலைவா் சரவணக்குமாா் வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...