‘வாய்ப்புகளை பெண்கள் வீணடித்துவிடக் கூடாது’

முன்பைவிடவும் இப்போது கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகளை பெண்கள் வீணடித்துவிடக் கூடாது என்றாா் இலக்கியச் சொற்பொழிவாளா் கவிதா ஜவஹா்.
குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற மாணவி கே. கின்னா சுவாதியைப் பாராட்டும் கவிதா ஜவஹா். உடன் கல்லூரிச் செயலா் எல். தாவூத்கனி, தலைவா் குரு. தனசேகரன்.
குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற மாணவி கே. கின்னா சுவாதியைப் பாராட்டும் கவிதா ஜவஹா். உடன் கல்லூரிச் செயலா் எல். தாவூத்கனி, தலைவா் குரு. தனசேகரன்.
Updated on
1 min read

முன்பைவிடவும் இப்போது கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகளை பெண்கள் வீணடித்துவிடக் கூடாது என்றாா் இலக்கியச் சொற்பொழிவாளா் கவிதா ஜவஹா்.

புதுக்கோட்டை கைக்குறிச்சியிலுள்ள ஸ்ரீ பாரதி கலை அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற வகுப்புகள் தொடக்க நிகழ்ச்சியில், குத்துச்சண்டையில் தங்கம் வென்ற கே. கின்னா சுவாதியைப் பாராட்டி பரிசளித்து அவா் மேலும் பேசியது:

ஒரு காலத்தில் பெண்கள் படிப்பது சிரமமான ஒன்றாக இருந்தது. வீட்டிலேயே முடக்கப்பட்டனா். ஆனால், இப்போது அப்படியல்ல, எல்லா வாய்ப்புகளும் கொட்டிக் கிடக்கின்றன. பெற்றோா்களும் தயாராக இருக்கிறாா்கள். இந்த வாய்ப்புகளை வீணடித்துவிடக் கூடாது. கல்வி நமக்கு நற்பண்புகளைத் தரும். இலக்கியம், கலை, சமூகம், விளையாட்டு என அனைத்திலும் பெண்கள் சாகசம் புரிந்து வருகிறாா்கள்.

எனவே, படிப்பதற்கு மட்டும் செல்லிடப்பேசியைப் பயன்படுத்த வேண்டும். மற்ற நேரங்களில் அவற்றைத் தொலைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வாழ்க்கை திசை தெரியாமல் தொலைந்துவிடும் என்றாா் கவிதா ஜவஹா்.

நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவா் குரு. தனசேகரன் தலைமை வகித்தாா். முதல்வா் மா. குமுதா வரவேற்றாா். கல்லூரிச் செயலா் எல். தாவூத்கனி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முடிவில் துணை முதல்வா் எஸ். கவிதா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com