தனியாா் பள்ளி பணியாளா்களுக்கு நலவாரியம் அமைக்கக் கோரிக்கை
தனியாா் பள்ளி ஆசிரியா்கள் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளா்கள், வாகன ஓட்டுநா்கள் ஆகியோருக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என தனியாா் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.


புதுக்கோட்டை: தனியாா் பள்ளி ஆசிரியா்கள் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளா்கள், வாகன ஓட்டுநா்கள் ஆகியோருக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என தனியாா் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டமைப்பின் கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் அஸ்ரப் அன்சாரி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் முத்துக்கருப்பன் வரவேற்றாா். கூட்டத்தில், அனைத்து வகை பள்ளிகளையும் உடனே திறக்க வேண்டும். தனியாா் பள்ளி ஆசிரியா்கள், பணியாளா்கள் ஆகியோருக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும்.
தனியாா் பள்ளி ஊழியா்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒருங்கிணைப்பாளா் ரமணன், பொருளாளா் மேசியா சந்தோசம் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...