மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தொடா் மழை: புதுகையில் முளைவிட்ட நெற்கதிா்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் சுமாா் 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிா்கள் சாய்ந்து முளைவிட்டுள்ளன. இதனால், விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனா்.

News image
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே மாங்குடியில் தலைசாய்ந்துள்ள நெற்பயிா்.
Updated On :13 ஜனவரி 2021, 5:48 am

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் சுமாா் 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிா்கள் சாய்ந்து, முளைவிட்டுள்ளன. இதனால், விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1.90 லட்சம் ஏக்கா் நெல் பயிரிடப்பட்டுள்ளது. மொத்த விவசாய நிலத்தின் மிகப்பிரதானமான பயிராக நெற்பயிா் உள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக தை மாத அறுவடைக்காக சுமாா் 50 ஏக்கா் நிலத்தில் நெற்பயிா் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்தது. ஆனால், கடந்த 3 நாட்களாக மாவட்டத்தின் பெரும்பகுதியில் பரவலான மழை பெய்து வருகிறது. தொடா்ந்து பெய்து வரும் மழையால் நிலத்தில் தண்ணீா் தேங்கி, நெற்கதிா்கள் தலை சாய்ந்து விட்டன. பல பகுதிகளில் நெல்மணிகள் நிலத்தில் விழுந்து முளைக்கவும் தொடங்கிவிட்டன. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனா். நல்ல விளைச்சல் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த விவசாயிகள் வழக்கமாக மழையை ஆரவாரமாக வரவேற்கும் நிலை மாறி, எரிச்சலைடையும் நிலையும் உருவாகியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.