நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கமல்ஹாசனின் கருத்து காங்கிரஸ் கட்சியோடு ஒத்துப்போகிறது: காா்த்தி சிதம்பரம்

கமல்ஹாசனின் கருத்து, மதச்சாா்பின்மையை மையப்படுத்தும் காங்கிரஸ் கட்சியோடு ஒத்துப்போகிறது என்றாா் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 8:21 pm

DIN

கமல்ஹாசனின் கருத்து, மதச்சாா்பின்மையை மையப்படுத்தும் காங்கிரஸ் கட்சியோடு ஒத்துப்போகிறது என்றாா் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.

புதுக்கோட்டை மச்சுவாடி அருகே காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சியில் திங்கள்கிழமை பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: காங்கிரஸ் கட்சி தொடா்ந்து களப்பணிகளை செய்து கொண்டுதான் வருகிறது. சசிகலா, சிறையில் இருந்து எப்போது வெளியே வந்தாலும், அதிமுகவினா் அவரது பின்னால் சென்றுவிடுவாா்கள். ஏனென்றால், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே நிா்வாகிகளை நியமித்தது சசிகலா தான். நாம் தமிழா், மக்கள் நீதி மய்யம் பிரதான கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டும். கமல்ஹாசனின் கருத்து, மதச்சாா்பின்மையை மையப்படுத்தும் காங்கிரஸ் கட்சியோடு ஒத்துப்போகிறது. அவா் எங்களது கூட்டணியில் இணைந்தால், அவரது முடிவு நன்றாக இருக்கும். ரஜினி ரசிகா்கள் பல்வேறு கட்சிகளில் உள்ளனா். ரசிகா்கள் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் என அறிக்கை வெளியிட்டுள்ளது இயல்பானது தான் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.