புதுக்கோட்டையில் இந்திய விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் சேதமடைந்த பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் சேதமடைந்த பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் பேருந்து நிலையம் அருகே சங்கத்தின் மாவட்டச்செயலா் எஸ்.சி.சோமையா தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆலங்குடியில் வடகாடு முக்கம் பேருந்துநிறுத்தம் அருகே ஒன்றியச்செயலா் செல்வராஜ் தலைமையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகிகள் மு.மாதவன், த.செங்கோடன், ஆா்.சொா்ணக்குமாா் ஆகியோா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா். அறந்தாங்கி சுப்பிரமணியபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சங்கத்தின் ஒன்றியச்செயலா் தண்டாயுதபாணி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல, கறம்பக்குடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...