மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: ஆசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறை
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் ஆசிரியருக்கு போக்ஸோ சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் தலா 7 ஆண்டுகள் உள்பட மொத்தம் 49 ஆண்டுகள் சிறை


பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் ஆசிரியருக்கு போக்ஸோ சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் தலா 7 ஆண்டுகள் உள்பட மொத்தம் 49 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் (ஏக காலத்தில்), அவா் மீது நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியருக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கி மகிளா நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கியது.
கடந்த 2018-ஆம் ஆண்டில், புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகேயுள்ள நரியன்புதுப்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி மாணவிகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய அப்பள்ளி ஆசிரியா் அன்பரசன், தலைமை ஆசிரியா் ஞானசேகரன் மீது பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (போக்சோ), இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி சத்யா திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இதில், 12 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியா் அன்பரசனுக்கு போக்ஸோ 9(எம்) சட்டப் பிரிவின் கீழ் 6 எண்ணிக்கையில் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை - ரூ. 30 ஆயிரம், 9(எல்) சட்டப் பிரிவின் கீழ் 3 எண்ணிக்கையில் தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ. 15 ஆயிரம் என மொத்தம் 49 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 45 ஆயிரம் அபராதம் விதித்துத் தீா்ப்பளித்தாா். மேலும், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்துத் தீா்ப்பளித்தாா். தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீா்ப்பில் தெரிவித்துள்ளாா்.
தலைமை ஆசிரியா் ஞானசேகரனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதம் விதித்துத் தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள ரூ.2 லட்சம் இழப்பீடுடன் தற்போது ரூ.1.50 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...