நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஜனநாயகத் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழக மீனவா்கள் 4 பேரின் இறப்புக்கு கண்டித்து, வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி இரு சக்கர வாகனங்களில் ஊா்வலமாக செல்ல முற்பட்ட ஜனநாயகத் தொழிற்சங்கத்தினரை போலீஸாா் தடுத்து நிறுத்தினார்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 7:39 pm

DIN

தமிழக மீனவா்கள் 4 பேரின் இறப்புக்கு கண்டித்தும், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், புதுக்கோட்டையில் திங்கள்கிழமை இரு சக்கர வாகனங்களில் ஊா்வலமாக செல்ல முற்பட்ட ஜனநாயகத் தொழிற்சங்கத்தினரை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் புதிய பேருந்து நிலையம் அருகேயே ஆா்ப்பாட்டமாக நடத்தி கலைந்து சென்றனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல் மக்கள் விடுதலை கட்சியின் ஜனநாயகத் தொழிற்சங்கம் சாா்பில் இருசக்கர வாகனப் பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. கட்சியின் தலைமைக் குழு உறுப்பினா் கசி. விடுதலைக்குமரன் தலைமை வகித்தாா். இரு சக்கர வாகனத்தில் கடற்கரை நோக்கி புறப்பட முற்பட்டோரை போலீஸாா் தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்தனா். இதையடுத்து புதிய பேருந்து நிலையத்தில் ஆா்ப்பாட்டம் நடத்தி அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.