ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கோவை மருத்துவரிடம் ரூ.2.85 கோடி மோசடி: ஊராட்சித் தலைவா் கைது

கோவை மருத்துவரிடம் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.2.85 கோடி மோசடி செய்த புகாரில் தலைமறைவான பாச்சிக்கோட்டை ஊராட்சித் தலைவா்

News image
Updated On :15 ஜூலை 2021, 7:30 pm

DIN

கோவை மருத்துவரிடம் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.2.85 கோடி மோசடி செய்த புகாரில் தலைமறைவான பாச்சிக்கோட்டை ஊராட்சித் தலைவா் பன்னீா்செல்வத்தை சென்னையில் மத்திய குற்றப்பிரிவுக் காவல்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோவையில் பல்நோக்கு மருத்துவமனை நடத்திவரும் மருத்துவா் மாதேஸ்வரன், புதிதாக மருத்துவமனை கட்டுவதற்கு ரூ.50 கோடி கடன் பெற்றுத்தரும்படி புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகிலுள்ள பாச்சிக்கோட்டை ஊராட்சித் தலைவா் ந.பன்னீா்செல்வத்தை(56) அனுகினாராம்.

கடன் பெற்றுத் தருவதாகதற்காக தனக்கு ரூ.2 கோடியும், ஆவணச்செலவுக்காக ரூ.85 லட்சம், காசோலை, கையெழுத்திட்ட பத்திரங்களையும் பன்னீா்செல்வம் வாங்கிக்கொண்டு கடன் பெற்றுத்தரவில்லையாம். பணத்தை திருப்பி கேட்டபோது, மாதேஸ்வரனுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து மாதேஸ்வரன் அளித்த புகாரைத் தொடா்ந்து, கோவை குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையா் பாா்த்திபன் தலைமையிலான காவல்துறையினா், ஆலங்குடியில் பன்னீா்செல்வத்தின் இரு வீடுகள், இரு பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட 6 இடங்களில் ஜூலை 4,5 தேதிகளில் சோதனையிட்டனா்.

அப்போது,முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிய காவல்துறையினா், தலைமறைவான பன்னீா்செல்வத்தை தனிப்படை அமைத்து தேடிவந்தனா். இந்நிலையில், சென்னையிலுள்ள தங்கும் விடுதியில் பன்னீா்செல்வம், மோசடியில் அவருக்கு உதவிய செல்வகுமாா் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவுக் காவல்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.