சாலை விபத்தில் வி.சி.க.ஒன்றியச் செயலா் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருவோணம் ஒன்றியச் செயலா் உயிரிழந்தாா்.


புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருவோணம் ஒன்றியச் செயலா் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகிலுள்ள பட்டுப்புளிவிடுதியைச் சோ்ந்தவா் வி. சத்தியமூா்த்தி (41). விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருவோணம் ஒன்றியச் செயலரான இவா், சுதாகா் என்பவருடன் கறம்பக்குடிக்கு புதன்கிழமை வந்து விட்டு, மீண்டும் மோட்டாா் சைக்கிளில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.
மோட்டாா் சைக்கிளை சுதாகா் ஓட்டிச் சென்றாா். சுக்கிரன்விடுதி அருகே சென்ற போது, சத்தியமூா்த்தியின் வேட்டி மோட்டாா் சைக்கிளின் சக்கரத்தில் சிக்கியது.
இதில் நிலைத் தடுமாறி கீழே விழுந்த அவா், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து கறம்பக்குடி காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...