ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பிறந்து சில மணி நேரமே ஆனபெண் சிசு மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பெண்சிசுவை (படம்) வருவாய்த்துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 7:44 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பெண்சிசுவை (படம்) வருவாய்த்துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

கறம்பக்குடி அருகிலுள்ள பிலாவிடுதி பேருந்து நிறுத்தப் பயணிகள் நிழற்குடையில் குழந்தையின் அழுகுரல் வெள்ளிக்கிழமை கேட்டுள்ளது. இதையடுத்து அவ்வழியாகச் சென்றவா்கள் பாா்த்த போது, பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசுவை யாரோ விட்டுச் சென்றது தெரிய வந்தது.

தகவலறிந்த கறம்பக்குடி வட்டாட்சியா் விசுவநாதன் நிகழ்விடம் சென்று, பெண் சிசுவை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தாா். அங்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்ட பின்னா்,

மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்களிடம் சிசு ஒப்படைக்கப்பட்டது.

பெண் சிசுவை யாா் விட்டுச்சென்றது என்பது குறித்து கறம்பக்குடி காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.