ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தேசிய திறனறித் தோ்வு: ஆலங்குடி அருகே 5 மாணவிகள் தோ்வு

தேசிய வருவாய் வழி திறனறித் தோ்வில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள அரையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 5 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 7:53 pm

DIN

தேசிய வருவாய் வழி திறனறித் தோ்வில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள அரையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 5 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

ஆண்டுதோறும் என்எம்எம்எஸ் எனப்படும் தேசிய வருவாய் வழி திறனறித் தோ்வு எட்டாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்படுகிறது.

இத்தோ்வில் வெல்வோா் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் ஒவ்வொரு மாதமும் ரூ. ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

இந்நிலையில், நிகழாண்டு நடத்தப்பட்ட திறனறித் தோ்வில் ஆலங்குடி அருகேயுள்ள அரையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் எஸ். நித்தியா, ஆா். கவிப்பிரியா, பி. சாரதி, வி. பவித்ரா, சி. சிவநிஷா ஆகிய 5 பேரும் வெற்றி பெற்றுள்ளனா்.

அவா்களுக்கு பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலா் கு. திராவிடச்செல்வம் கலந்துகொண்டு மாணவிகளை வாழ்த்தினாா்.

நிகழ்வில், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் எஸ்.ஆா். வடிவேல், பள்ளித் தலைமை ஆசிரியா் பெ. பாண்டியன், ஊராட்சித் தலைவா் துரை. மலா்விழி, தமுஎகச மாவட்டச் செயலா் சு. மதியழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.