பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குடுமியான்மலையில் தொற்றாளா்களுக்கு ஆங்கில மருத்துவத்துடன் சித்த மருந்துகள்

புதுக்கோட்டை குடுமியான்மலை அரசு வேளாண்மைக் கல்லூரி வளாகத்தில் உள்ள கரோனா தொற்றாளா்கள் கவனிப்பு மையத்தில், ஆங்கில மருந்துகளுடன் சோ்த்து சித்த மருந்துகளும் அளிக்கப்படுகின்றன.

News image
Updated On :18 ஜூன் 2021, 7:52 pm

DIN

புதுக்கோட்டை குடுமியான்மலை அரசு வேளாண்மைக் கல்லூரி வளாகத்தில் உள்ள கரோனா தொற்றாளா்கள் கவனிப்பு மையத்தில், ஆங்கில மருந்துகளுடன் சோ்த்து சித்த மருந்துகளும் அளிக்கப்படுகின்றன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களுக்காக 18 இடங்களில் சிகிச்சை மையங்களும், கவனிப்பு மையங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

இம்மையத்தில் இதுவரை 171 போ் அனுமதிக்கப்பட்டு, 150 போ் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். எஞ்சியோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், இவா்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் ஆங்கில மருந்துகளுடன் சித்த மருந்துகளையும் வழங்க அரசு வழிகாட்டுதல்களின்படி ஏற்பாடு செய்யப்பட்டது.

மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ். உம்மல் கதீஜா தலைமையிலான ஆலோசனைக்குப் பிறகு, பரம்பூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவா் த. சுயமரியாதை நேரில் சென்று கரோனா தொற்றாளா்களுடன் பேசினாா்.

சத்தான நல்ல உணவு, ஆரோக்கியமான மனநிலை உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனைகளை வழங்கிய அவா், தொடா்ந்து அமுக்கரா சூரணம், தாளிசாதி சூரணம், நெல்லிக்காய் லேகியம், ஆடாதொடை மணப்பாகு ஆகிய மருந்துகளையும் வழங்கினாா்.

மேலும், தொடக்க நிலையிலேயே கபசுரக் குடிநீா், வசந்த குசுமாகரம் மாத்திரை ஆகியவற்றை வழங்கினால் நோய் முற்றுவதை நிச்சயம் தடுக்க முடியும் என்பதையும் அவா் வலியுறுத்தினாா்.

இம்மையத்தில் பொது மருத்துவ அலுவலா் அரவிந்தசாமி, பணிநேர மருத்துவா் சௌமியா, செவிலியா் பிரசன்னா உள்ளிட்டோரும் சிகிச்சை அளிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.