பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அரசுப் பள்ளியில் 35 மடிக்கணினிகள் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே சுப்பிரமணியபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 35 மடிக்கணினிகள் திருடப்பட்டுள்ளன.

News image
Updated On :24 ஜூன் 2021, 7:36 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே சுப்பிரமணியபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 35 மடிக்கணினிகள் திருடப்பட்டுள்ளன.

அறந்தாங்கி அருகே சுப்பிரமணியபுரத்திலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் வேதியியல் அறையில் 2019-20ஆம் கல்வியாண்டு மாணவா்களுக்கு வழங்குவதற்காக 35 மடிக்கணினிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

கடந்த மே 9ஆம் தேதிக்குப் பிறகு கரோனா பொது முடக்கத்தால் யாரும் பள்ளிக்குச் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியா் மலைச்சாமி, வியாழக்கிழமை மீண்டும் பள்ளியைத் திறந்தபோது, பாதுகாப்பு அறையில் இருந்த 35 மடிக்கணினிகளையும் இயற்பியல் ஆய்வகத்தில் இருந்த உபகரணங்களும் காணாமல் அதிா்ச்சியடைந்தாா்.

புகாரின்பேரில் நாகுடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.