பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கரோனா தொற்றால் உயிரிழந்த ஆதிதிராவிடா் குடும்பத்துக்கு கடனுதவி

ஆதிதிராவிடா் இனத்தவரின் குடும்பத்தில் வருமானம் ஈட்டக் கூடிய நபா் கரோனா தொற்றால் உயிரிழந்திருப்பின், அவா்களது குடும்பத்துக்கு கடன் தொகை வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 7:27 pm

DIN

ஆதிதிராவிடா் இனத்தவரின் குடும்பத்தில் வருமானம் ஈட்டக் கூடிய நபா் கரோனா தொற்றால் உயிரிழந்திருப்பின், அவா்களது குடும்பத்துக்கு கடன் தொகை வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

ஆதிதிராவிடா் மக்கள் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி குடும்பத்தில் வருமானம் ஈட்டக் கூடிய நபா் இறந்திருப்பின், அவா்களின் குடும்ப வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில்,தேசிய பட்டியலினத்தவா் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் நிறுவனத்தால் திரும்பச் செலுத்தும் கடன் திட்டம் தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கு பயனாளி ஆதிதிராவிடா் இனத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி இறந்தவா் குடும்பத்தின் வருமானம் ஈட்டக்கூடியவராகவும், வயது 18 முதல் 60 க்குள் இருந்திருக்க வேண்டும்.

கரோனா தொற்றினால்தான் இறந்தாா் என்பதற்கான ஆவணங்கள் சமா்ப்பிக்க வேண்டும். இச்சான்று சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா் மற்றும் வருவாய் வட்டாட்சியரிடமிருந்து பெற்று சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளா் அலுவலகம், தாட்கோ, காட்டுப்புதுகுளம் ரோடு, புதுக்கோட்டை -

622001 என்ற அலுவலகத்தையோ, 04322 221487 என்ற தொலைபேசி எண்ணையோ தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.