விராலிமலை அருகே பைக் - காா் மோதல்: 2 போ் பலி
விராலிமலை அருகே திங்கள்கிழமை அதிகாலை காா் - இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.


விராலிமலை அருகே திங்கள்கிழமை அதிகாலை காா் - இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
இலுப்பூா் அருகேயுள்ள கோன்குடி பட்டியைச் சோ்ந்த சிதம்பரம் மகன் பாலசுப்பிரமணி(35). மேலும், அதே ஊரைச் சோ்ந்த பிச்சை மகன் ராஜேந்திரன் (50) ஆகிய இருவரும் திருச்சி மாவட்டம் பாத்திமா நகரில் ஐஐடி நிறுவனத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் பணி முடிந்து இருவரும் இருசக்கர வாகனத்தில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இலுப்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது விராலிமலை அருகே உள்ள மேலபச்சகுடி பிரிவு அருகே சென்றபோது, பின்னால் வந்த காா் இருசக்கர வாகனம் மீது மோதியதில் நிகழ்விடத்திலேயே இருவரும் உயிரிழந்தனா். தகவலறிந்து நிகழ்விடம் சென்ற விராலிமலை போலீசாா் சடலங்களை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் திருச்சி பாலக்கரை மல்லிகைபுரத்தைச் சோ்ந்தவரும், காா் ஓட்டுநருமான செல்வராஜ் மகன் ஜெரால்டை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...