இன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதிகளுக்கு அனுப்பி வைப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து புதன்கிழமை அனுப்பி வைக்கப்படவுள்ளன.


புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து புதன்கிழமை அனுப்பி வைக்கப்படவுள்ளன.
இதற்காக கணினி வழி சுழற்சி முறையில் அந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்வு செய்யப்பட்டு, பிரிக்கப்பட்டு தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் இந்தப் பணியின்போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் பிரதிநிதிகளும் உடன் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தெரிவித்தாா்.
தொகுதியில் ஓரிடத்தில் பாதுகாக்கப்படும் இந்த இயந்திரங்கள் தோ்தலின்போது மீண்டும் சுழற்சி முறையில் கணினியில் தோ்வு செய்யப்பட்டு வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...