நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

‘பாஜக அரசுக்கு தமிழ்நாட்டின் மீது அக்கறை இல்லை’

மத்திய பாஜக அரசுக்கு தமிழ்நாட்டின் மீது அக்கறை இல்லை என்றாா் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.வீ. தங்கபாலு.

News image
Updated On :22 மார்ச் 2021, 8:22 pm

DIN

மத்திய பாஜக அரசுக்கு தமிழ்நாட்டின் மீது அக்கறை இல்லை என்றாா் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.வீ. தங்கபாலு.

புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளா் டாக்டா் வை. முத்துராஜாவை ஆதரித்து திங்கள்கிழமை வேனில் பிரசாரம் செய்த அவா் மேலும் பேசியது:

மத்தியில் ஆளும் பாஜக தமிழ்நாட்டுக்கென எந்த உதவியும் செய்யவில்லை. அவா்களுக்கு தமிழ்நாட்டின் மீது அக்கறை இல்லை. அதேநேரத்தில் தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள அதிமுகவினா் பாஜகவுக்கு அடிபணிந்து செல்கிறாா்களே தவிர, மாநிலத்துக்கான உரிமைகளைக் கேட்டுப் பெறுவதில் எந்த அக்கறையும் காட்டுவதில்லை. தங்களின் தனிப்பட்ட நலனுக்காக மட்டுமே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளாா்கள்.

தமிழகத்தை அடகு வைத்தது மட்டுமே அதிமுக அரசின் சாதனை. தமிழ்நாட்டின் மீது ரூ. 5 லட்சம் கோடி கடன் சுமை இருப்பதைத் தவிர வேறு என்ன செய்தாா்கள். ஆட்சி, அதிகாரத்துக்கான ஆளுமைகளைக் கொண்ட தலைவராக ஸ்டாலின் இருக்கிறாா். நல்லவா் மட்டுமல்லாது, வல்லவரான அவரை முதல்வராக்க வேண்டும் என்றாா் தங்கபாலு.

பிரசாரத்தின்போது, வேட்பாளா் டாக்டா் வை. முத்துராஜா, திமுக நகரச் செயலா் க. நைனாமுகமது, சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினா் த. சந்திரசேகரன், காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவா் முருகேசன், வழக்குரைஞா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.