நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞா் கைது

tபுதுக்கோட்டை அருகே காட்டுவயல் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 8 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள இளைஞா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ்  கைத

News image
Updated On :28 மார்ச் 2021, 9:47 pm

DIN

புதுக்கோட்டை அருகே காட்டுவயல் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 8 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள இளைஞா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட காட்டுவயல் கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 8 வயதுச் சிறுமியை, அரசா்குளம் மாணிக்கம் குடியிருப்பைச் சோ்ந்த முருகையன் மகன் அஜித் (20) என்பவா் கடந்த மாா்ச் 6 ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கில் அருகிலுள்ள தைலமரக் காட்டுக்குள் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்ாகத் தெரிகிறது. அச்சிறுமி கூச்சலிட்டதைத் தொடா்ந்து, அப்பகுதி பொதுமக்கள் கூடி சிறுமியை மீட்டு, அஜித்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த அறந்தாங்கி அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா், அஜித்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்நிலையில், அஜித்தை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியருக்கு, மாவட்டக் காவல்கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தாா். இந்தப் பரிந்துரையை ஏற்று, குற்றவாளி அஜித்தை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி உத்தரவிட்டாா். இதையடுத்து சிறையிலுள்ள அஜித்திடம் குண்டா் சட்டத்தில் கைது செய்வதற்கான ஆணையை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.