வாக்கு எண்ணிக்கை தொடங்கி 5 மணி நேரம் ஆகியும் விராலிமலை தொகுதியில் முதல் சுற்றே முடிக்கப்படாமல் உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் போட்டியிடும் தொகுதி. திமுக சார்பில் மா. பழனியப்பன் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8.30 மணிக்குத் தொடங்கியது.
முதல் சுற்றில் ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எழுதப்பட்டிருந்த எண்ணும் ஆவணங்களில் இருந்த எண்ணும் வேறுபட்டது. நீண்ட வாக்குவாதத்துக்குப் பிறகு அந்தப் பெட்டி திறந்து எண்ணப்பட்டதுடன் விவிபாட் இயந்திரமும் எண்ணப்பட்டு சரி பார்க்கப்பட்டது.
அதன்பிறகு 2ஆம் சுற்றுக்கான இயந்திரங்கள் எடுத்து வரப்பட்டன. அதிலும் ஒரு இயந்திரத்தில் இருந்த எண் மாறுபட்டது. தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எழுதப்பட்ட எண்கள் மாறுபட்டே வருவதைக் கண்ட திமுக வேட்பாளர் மற்றும் முகவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரினர்.
பகலில் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்த திமுக மாவட்டப் பொறுப்பாளர் கே.கே. செல்லப்பாண்டியன், இதுதொடர்பாக மாவட்டத் தேர்தல் அலுவலர் பி. உமாமகேஸ்வரிக்கு எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்தார். சுமார் 5 மணி நேரம் கடந்தும் விராலிமலை தொகுதி எண்ணிக்கையில் முதல் சுற்றைக் கூட முடிக்க முடியாமல் தேங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தண்டவாளத்தில் விழுந்த குழந்தை! உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய தந்தை! | Bangladesh

மே நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

13,380 mAh பேட்டரி, 12ஜிபி ரேம்.. ஒன்பிளஸ் டேப்லெட் பேட் 4-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

ரியான் பராக் சம்பளத்தில் 25% 'கட்'? ராஜஸ்தான் அணிக்குத் தொடரும் அபராதங்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


