ஆலங்குடியில் 2 கடைகளுக்கு சீல்
ஆலங்குடியில் விதிகளை மீறி திறக்கப்பட்ட 2 கடைகளுக்கு வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.


ஆலங்குடியில் விதிகளை மீறி திறக்கப்பட்ட 2 கடைகளுக்கு வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.
கரோனா பரவலை தடுக்கும் வகையில் தளா்வுகளுடன் கூடிய கடைகள் அடைப்பை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், ஆலங்குடியில் அரசு உத்தரவை மீறி திறக்கப்பட்டிருந்த நகலகம் உள்ளிட்ட 2 கடைகளுக்கு ஆலங்குடி வட்டாட்சியா் கருப்பையா சீல் வைத்தாா். தொடா்ந்து, விதிகளை மீறிய 15 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆலங்குடி காவல் ஆய்வாளா் அலாவுதீன் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...