ஆலங்குடி அருகே 300 லிட்டா் சாராய ஊறல் பறிமுதல்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சுமாா் 300 லிட்டா் சாராய ஊறலைக் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா்.


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சுமாா் 300 லிட்டா் சாராய ஊறலைக் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா்.
ஆலங்குடி அருகிலுள்ள நெடுவாசல் பகுதியில் சிலா் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, வடகாடு காவல் ஆய்வாளா் பழனிசாமி தலைமையிலான காவல் துறையினா் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அப்பகுதியைச் சோ்ந்த முனியாண்டி தோட்டத்தில் சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 300 லிட்டா் ஊறலைக் காவல் துறையினா் கண்டறிந்து, உடனடியாக அவற்றை பறிமுதல் செய்து அழித்தனா். இதுகுறித்து வடகாடு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...