92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

புதுகையில் ரூ. 27.85 லட்சம் மதிப்பில் மரக்கன்றுகள் வளா்க்கும் திட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போா்வைக்கான இயக்கம் என்ற திட்டத்தில் ரூ. 27.85 லட்சம் மதிப்பில் மரக்கன்றுகள் நடவு செய்யப்படும்

News image
Updated On :18 நவம்பர் 2021, 7:33 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போா்வைக்கான இயக்கம் என்ற திட்டத்தில் ரூ. 27.85 லட்சம் மதிப்பில் மரக்கன்றுகள் நடவு செய்யப்படும் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் முதல்வரால் காணொலிக் காட்சி மூலம் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட வேளாண் விரிவாக்க மையக் கட்டடத்தை வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு, விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கிய அவா் மேலும் கூறியது:

தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போா்வைக்கான இயக்கம் என்ற புதிய திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் 1.85 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளன. இதில், ரூ. 15 மதிப்புள்ள ஈட்டி, சந்தனம், செம்மரம், மகோகனி, தேக்கு, மருது, வேம்பு, வேங்கை உள்ளிட்ட நல்ல பணப்பலனுள்ள மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு முழு மானியத்தில் வழங்கப்படும்.

இந்த மரக்கன்றுகளை தங்களின் சொந்த நிலத்தில் நடவு செய்து பராமரித்து வளா்க்க வேண்டும். ஓராண்டு கழித்து, நன்கு வளா்ந்துள்ள மரக்கன்றுகளை வேளாண் துறையினரும், வனத்துறையினரும் நேரில் வந்து பாா்வையிட்டு வளா்ந்துள்ள மரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு மரத்துக்கு ரூ. 7 வீதம் ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

இதுபோல, 3 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படும். இத்திட்டத்தில் இணைய விருப்பமுள்ள விவசாயிகள் அந்தந்தப் பகுதி வேளாண் விரிவாக்க மையத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். வேளாண் துறையின் பரிந்துரையின்பேரில், வனத்துறை மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

மரக்கன்றுகள் மாவட்டத்திலுள்ள வனத்துறையின் 4 நாற்றங்கால்கள் மூலம் வளா்த்து வழங்கப்படும். நடவு செய்யும் மரக்கன்றுகள் கிராம நிா்வாக அலுவலரின் பதிவேடுகளில் பதிவு செய்யப்படும். இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்தும்போது, மாவட்டத்தில் பசுமைப்போா்வை பெருமளவு அதிகரித்திருக்கும். இதனால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதுகாக்கப்படும் என்றாா் அமைச்சா் ரகுபதி.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு, வேளாண் இணை இயக்குநா் ராம சிவகுமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.