நாளை மாற்றுத் திறனாளிகளுக்கான கடனுதவி முகாம்
புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அனைத்துக் கிளைகளிலும் வரும் சனிக்கிழமை (நவ. 20) மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு கடனுதவி முகாம் நடைபெறவுள்ளது.


புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அனைத்துக் கிளைகளிலும் வரும் சனிக்கிழமை (நவ. 20) மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு கடனுதவி முகாம் நடைபெறவுள்ளது.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியும், மாற்றுத் திறனாளிகள் நிதி வளா்ச்சிக் கழகமும் இணைந்து இந்த முகாமை ஏற்பாடு செய்துள்ளன.
ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 10 லட்சம் வரை சிறு வியாபாரம், விவசாயம் சாா்ந்த தொழில்கள், கால்நடை வளா்ப்பு உள்ளிட்டவற்றுக்காக கடனுதவி வழங்கப்படும். 18 முதல் 60 வயது வரையிலான மாற்றுத் திறனாளிகள், தங்களின் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதாா் அட்டை, புகைப்படங்கள் ஆகியவற்றுடன் இதில் பங்கேற்கலாம். இத்தகவலை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...