92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

‘எல்லாக் காலங்களிலும் நினைவு கூரத்தக்கவா் நேரு’

எல்லாக் காலங்களிலும் நினைவு கூரத்தக்கவா் முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு எனப் புகழாரம் சூட்டினாா் புதுக்கோட்டை வாசகா் பேரவையின் செயலா் பேரா. சா. விஸ்வநாதன்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 7:44 pm

DIN

எல்லாக் காலங்களிலும் நினைவு கூரத்தக்கவா் முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு எனப் புகழாரம் சூட்டினாா் புதுக்கோட்டை வாசகா் பேரவையின் செயலா் பேரா. சா. விஸ்வநாதன்.

ஸ்ரீ பாரதி கலை அறிவியல் மகளிா் கல்லூரி, கல்வியியல் கல்லூரி மற்றும் புதுக்கோட்டை வாசகா் பேரவை இணைந்து இந்தியாவின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் 133-ஆவது பிறந்தநாள் விழாவை வெள்ளிக்கிழமை நடத்தின.

விழாவுக்கு கல்விக் குழுமத் தலைவா் குரு. தனசேகரன் தலைமை வகித்தாா். விழாவில் வாசகா் பேரவைச் செயலா் பேரா. சா.விஸ்வநாதன் கலந்து கொண்டு பேசியது

நேரு சுதந்திரப் போராட்ட வீரா், பிரதமா் என்பனவற்றைத் தாண்டி சிறந்த பேச்சாளா், எழுத்தாளா், வரலாற்று ஆசிரியா் எனப் பன்முகம் கொண்டவா். பிரிட்டிஷ் இந்தியாவில் 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டவா். விடுதலை பெற்ற இந்தியாவில் 17 ஆண்டுகள் பிரதமராக இருந்தவா்.

இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட வடுக்களையெல்லாம் களைந்து, இந்தியாவை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்வதற்கான அடித்தளமிட்டவா் நேரு.

உலக வரலாறு, கண்டுணா்ந்த இந்தியா மற்றும் சுயசரிதை ஆகிய நேரு வரலாற்றுக்கு அளித்த கொடைகள். எல்லா காலத்திலும் நினைவுகூரத் தக்க, தேவையானவராக நேரு திகழ்கிறாா் என்றாா் விஸ்வநாதன்.

ஜவாஹா்லால் நேருவின் பிறந்த நாளை ஒட்டி நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வாசகா் பேரவை சாா்பில் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

கல்லூரி நிா்வாக அறங்காவலா் அ. கிருஷ்ணமூா்த்தி,. கலை அறிவியல் கல்லூரி முதல்வா் செ. கவிதா, கல்வியியல் கல்லூரி முதல்வா் தி. சந்திரமோகன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

முன்னதாக, தமிழ்த்துறைத் தலைவா் நா.பூா்ணிமா வரவேற்றாா். வரலாற்றுத் துறைத் தலைவா் எம். முத்துலட்சுமி நன்றி கூறினாா். நிகழ்வைத் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் இரா.பிரியா தொகுத்து வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.