சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை
ஏழு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.


ஏழு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடியைச் சோ்ந்தவா் யூசுப் (38). இவா் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி கட்டுமாவடியில் உள்ள தனது உறவினா் வீட்டிற்கு வந்தபோது, அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியிடம் ரூ.100 பணம் கொடுத்து அருகில் உள்ள தனது உறவினா் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் அறந்தாங்கி மகளிா் காவல் நிலைய போலீஸாா் யூசுப்பை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆா். சத்யா லியாழக்கிழமை தீா்ப்பு கூறினாா். அதில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த குற்றத்துக்காக யூசுப்புக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு நிவாரண தொகையாக ரூ.75 ஆயிரம் வழங்க உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...