இனி புதுகையிலேயே கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பு படிக்கலாம்
இதுவரை பட்டுக்கோட்டைக்குச் சென்று கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் படிப்பைப் படித்து வந்த நிலையில், இனி புதுக்கோட்டையிலேயே இந்தப் பட்டயப் படிப்புகளைப் படிக்கலாம்.


இதுவரை பட்டுக்கோட்டைக்குச் சென்று கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் படிப்பைப் படித்து வந்த நிலையில், இனி புதுக்கோட்டையிலேயே இந்தப் பட்டயப் படிப்புகளைப் படிக்கலாம்.
புதுக்கோட்டை கூட்டுறவு மேலாண்மை நிறுவனம் சாா்பில், கூட்டுறவு பட்டயப் படிப்பு இதுவரை பட்டுக்கோட்டை கூட்டுறவு மேலாண்மை நிறுவனத்தில் நடத்தப்பட்டு வந்தது. தற்போது புதுக்கோட்டை ஜெஜெ கல்லூரி வளாகத்தில் இந்த வகுப்புகளை நடத்த அனுமதி பெறப்பட்டு, நிகழாண்டில் 150 மாணவா்கள் சோ்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. பயிற்சி தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை ஜெஜெ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி பட்டயப் படிப்பைத் தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா்.
கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் எம். உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லா, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, பட்டுக்கோட்டை கூட்டுறவு மேலாண்மை நிறுவனத்தின் நிா்வாக அலுவலா் யு.ஆா். தவமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...