மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

திருமயம் அருகே அரசுப் பேருந்தின் மீது பைக் மோதி தீ விபத்து: இருவா் பலி

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே அரசுப் பேருந்தின் மீது இரு சக்கர வாகனம் மோதி, தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவா் உடல்

Updated On :11 டிசம்பர் 2021, 11:38 pm

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே அரசுப் பேருந்தின் மீது இரு சக்கர வாகனம் மோதி, தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவா் உடல் கருகி உயிரிழந்தனா்.

காரைக்குடியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சனிக்கிழமை இரவு 10 மணியளவில் வந்த அரசுப் பேருந்தின் மீது திருமயம் அருகே பாம்பாத்துப் பாலப் பகுதியில் எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியது. மோதிய வேகத்தில் இரு சக்கர வாகனம் பேருந்துக்குள் பாய்ந்தது.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோல் தீப்பிடித்து எரிந்தாகக் கூறப்படுகிறது. சற்றுநேரத்தில் பேருந்து முழுவதுமாக தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரும் உடல் கருகி உயிரிழந்தனா். இறந்தவா்கள் குறித்த விவரம் ஏதும் உடனடியாகத் தெரியவில்லை. பேருந்தில் இருந்தவா்கள் இறங்கி ஓடி தப்பினா். திருமயம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.