நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

அணு ஆயுத எதிா்ப்பு தினம் அனுசரிப்பு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கந்தா்வகோட்டை கிளையின் சாா்பில், அணு ஆயுத எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:23 pm

DIN

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கந்தா்வகோட்டை கிளையின் சாா்பில், அணு ஆயுத எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நிகழ்வில், வட்டாட்சியா் க. ராஜேஸ்வரி தலைமை வகித்துப் பேசினாா். இதில், இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா(ஆக. 6) மற்றும் நாகசாகி(ஆக. 9) அணுகுண்டுகள் வீசி அழிக்கப்பட்ட கோரச்சம்பவத்தை நினைவுக்கூரும் விதத்தில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது என்றாா். தொடா்ந்து, அரசு உயா்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அக்கச்சிப்பட்டி ஆகிய பள்ளிகளின் மாணவா்கள் அணு ஆயுத எதிா்ப்பு உறுதிமொழி ஏற்றனா்.

இதையடுத்து, புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவுக்குச்சென்ற மாணவா்களை எம்எல்ஏ மா. சின்னத்துரை வாழ்த்தினாா்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் மு.முத்துக்குமாா் வரவேற்றாா். வருவாய் ஆய்வாளா் செல்ல சத்யா முன்னிலை வகித்தாா். வட்டாரத் தலைவா் ரகமதுல்லா ஒருங்கிணைத்தாா். ஏற்பாடுகளை கோட்டாட்சியா் கி. கருணாகரன் செய்திருந்தாா்.

நிகழ்ச்சியில், சங்கத்தின் மாவட்ட இணைச்செயலாளா் துரையரசன், வட்டாரச் செயலா் மா. சின்னராஜா, பட்டதாரி ஆசிரியை சத்தியபாமா, இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னாா்வலா்கள் ஸ்ரீமதி ஸ்வேதா, ஹேமலதா, புவனேஸ்வரி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.